வள்ளியூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


வள்ளியூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

வள்ளியூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்தும், உயர்கல்வியில் அனைத்து துறைகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு என்பதை திரும்ப பெற வலியுறுத்தியும், வள்ளியூர் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், வள்ளியூர் யூனியன் தலைவர் ராஜா ஞானதிரவியம், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா, துணைத்தலைவர் நீலகண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன்,

நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட பிரதிநிதி சமூகை முரளி, களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், கட்சி நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி சின்னத்துரை, ஜான்ஸ் ரூபா, நாங்குநேரி யூனியன் துணைத்தலைவர் இசக்கிபாண்டி, நாங்குநேரி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், பஞ்சாயத்து தலைவர்கள் அனிதா பிரின்ஸ், பொன்மீனாட்சி அரவிந்தன், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஞானராஜ், பணகுடி நகர செயலாளர் தமிழ்வாணன், நிர்வாகிகள் பரப்பாடி சேர்மபாண்டி, மாயகிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story