இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லையில் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி தி.மு.க. இளைஞர்- மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த நிர்வாகி பத்தமடை பரமசிவம் தலைமை தாங்கினார்.

அப்துல் வகாப் எம்.எல்.ஏ.

மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'செம்மொழியான தமிழ் மொழியை காப்பதே நம்முடைய நோக்கமாகும். தமிழனின் உணர்வு, உயிர், வாழ்வு எல்லாமே தமிழ் தான். தமிழனின் அடையாளம் தாய் தமிழ்மொழியாக இருக்க வேண்டும். இரவல் மொழியான இந்தி தேவையில்லை. நேரு பிரதமராக இருந்தபோது ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்று அறிவித்தார். அந்த நடைமுறையை தொடர வேண்டும். இந்தியை ஏற்க மாட்டோம். இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், வசந்திமுருகேசன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், மாநகர துணைச்செயலாளர்கள் சுதா மூர்த்தி, மூளிகுளம் பிரபு, சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஆறுமுகராஜா, பாலபாக்கியா சரவணன், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி பிரபு, மகேஸ்வரி, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், வில்சன் மணித்துரை, கோகுலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story