நாசரேத்தில் தி.மு.க.வினர் போராட்டம்:சாமியார் உருவபொம்மை எரிப்பு


நாசரேத்தில் தி.மு.க.வினர் போராட்டம்:சாமியார் உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் தி.மு.க.வினர் சாமியார் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

நாசரேத்:

நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்த உத்திரபிரதேச சாமியார் பரஹம்ஸ ஆச்சார்யாவை கண்டித்து தி.மு.க.வினர் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், பால்துரை, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story