தி.மு.க. சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது
கரூர்
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று வெண்ணைமலை அன்புக்கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர்கள் கோல்டுஸ்பாட் ராஜா, அன்பரசன், அன்பு கரங்கள் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூரில் கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story