தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது, செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் பூசைபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

அரசு கொறடா கோவி செழியன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தலைமை கழக பேச்சாளர் இஸ்மாயில், மாவட்ட பேச்சாளர் சாகுல் ஹமீது ஆகியோர் பேசினர். முன்னதாக திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம், தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story