தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரில் தி.மு.க.சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் ஆர்.கோபி தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் டி.குணா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு தி்.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., உறுப்பினர் சேர்க்கையின் மேலிட பார்வையாளரான முன்னாள் மத்திய மந்திரி வேங்கடபதி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றி நிர்வாகிகளிடம் விளக்கி கூறினர். இதில் நகர வர்த்தக சங்க தலைவர் கே.ஏ.ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் ஐ.ஆர்.கோவிந்தராஜன், எல்.தங்கராஜ், அண்ணாதுரை, ஜல்லிபிரகாஷ், மகாலிங்கம், துரைராஜன், பிரமிளாராகவன், சண்முகவள்ளிஜெகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்கட், லதாசரவணன், தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வி.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story