திருவள்ளுவர் சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை

தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
தென்காசி
தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளிக்கு கடந்த 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வந்திருந்தார். அப்போது விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். அந்த சிலைக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், பள்ளி தாளாளர் வீரவேல் முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் தென்காசி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, செங்கோட்டை முன்னாள் நகர செயலாளர் ரஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






