தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
முக்கூடலில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
முக்கூடல்:
முக்கூடல் பேரூர் தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம், முக்கூடல் காந்தி சிலை அருகில் உள்ள பேரூராட்சி கலையரங்கத்தில் நடந்தது. முக்கூடல் பேரூர் தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான லட்சுமணன் தலைமை தாங்கினார். பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து, பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆணைக்குட்டி பாண்டியன், அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story