தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம்: தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்
மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாக தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 19 எம்.பி.க்கள் நேற்று முன்தினம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல் அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். இதில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மருத்துவமனை தூய்மை பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், டாஸ்மாக் தொழிலாளர்கள், லாரி பட்டறை தொழிலாளர்கள் என பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story