தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு
சூலூர் அருகே தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் 18 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சூலூர்
சூலூர் அருகே தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் 18 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தி.மு.க. கவுன்சிலர்
கோவையை அடுத்த சூலூர் - அப்பநாயக்கன்பட்டி மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது58). அப்பநாயக்கன் பட்டி ஊராட்சி வார்டு தி.மு.க. கவுன்சிலர். இவர் நேற்று முன் தினம் காலை தனது குடும்பத்தினருடன் கதிர்நாயக்கன்பாளையத் தில் உள்ள தனது உறவினரின் திதி காரியத்திற்காக சென்றார்.
அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் அன்று இரவே அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்ற பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன.
18 பவுன் நகை திருட்டு
இதையடுத்து குடும்பத்தினர் வந்து பார்த்த போது பீரோவில் 2 பவுன் தங்கசங்கிலி, 2½ பவுன் பிரேஸ்லெட், 3 பவுன் ஆரம், 2 பவுன் நெக்லஸ் உள்பட 18 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தி.மு.க. கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து பகலிலேயே நகை திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.