தி.மு.க. கல்வெட்டில் பா.ஜ.க.வின் விளம்பர பதாகை ஒட்டப்பட்டதால் பரபரப்பு


தி.மு.க. கல்வெட்டில் பா.ஜ.க.வின் விளம்பர பதாகை ஒட்டப்பட்டதால் பரபரப்பு
x

தி.மு.க. கல்வெட்டில் பா.ஜ.க.வின் விளம்பர பதாகை ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர்

புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஹைஸ்கூல்மேடு பகுதியில் புகழூர் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டில் பா.ஜ.க. சார்பில் கரூரில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற மாநிலத்தலைவர் அண்ணாமலையை வரவேற்கும் விளம்பரம் பதாகை ஒட்டப்பட்டுஇருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் நகராட்சி தலைவரும், நகரகழக செயலாளருமான சேகர் என்கிற குணசேகரனுக்கு மற்றும் தி.மு.க.வினர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் விளம்பர பதாகையை ஒட்டிய சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் வரவழைத்து ஒட்டிய விளம்பர பதாகைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

1 More update

Next Story