கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்தவரை பிடிக்க முயன்ற தே.மு.தி.க. பிரமுகருக்கு கத்தி வெட்டு
கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்தவரை பிடிக்க முயன்ற தே.மு.தி.க. பிரமுகருக்கு கத்தி வெட்டு விழுந்தது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 54). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்தபடி பொதுமக்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த அதேஊரை சேர்ந்த மணம்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. துணைதலைவர் வெங்கடேசன்(48) என்பவர், சக்திவேலை மடக்கி பிடித்து கத்தியை அவரிடம் இருந்து பிடுங்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் வெங்கடேசனை கத்தியால் தலையில் வெட்டிவிட்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனா். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிக்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே ஊராட்சி மன்ற தலைவர் பிரபு கிராம இளைஞர்களுடன் சேர்த்து சக்திவேலை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கியதோடு, அவரை அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சக்திவேலை விக்கிரவாண்டியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் டி.தேவனூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.