திருச்செங்கோட்டில், மதுரா செந்திலுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


திருச்செங்கோட்டில், மதுரா செந்திலுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மதுரா செந்திலுக்கு திருச்செங்கோட்டில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

மேற்கு மாவட்ட செயலாளர்

தி.மு.க.வின் 15-வது தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட செயலாளராக மதுரா செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட மதுரா செந்திலுக்கு திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில் திருச்செங்கோட்டிற்கு வருகை தந்த மதுரா செந்திலுக்கு தி.மு.க. மாநில தலைமை செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் நகர் மன்ற தலைவர் முன்னாள் நகர தி.மு.க. செயலாளர் நடேசன், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் தலைமையில் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட்டாசு வெடித்து

இதில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் மதுரா செந்திலுக்கு மகத்தான வரவேற்பு அளித்தனர். இதையொட்டி தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட துணை செயலாளர் சாந்தி மயில்சாமி, நகர செயலாளர்கள் திருச்செங்கோடு கார்த்திகேயன், பள்ளிபாளையம் குமார், குமாரபாளையம் செல்வம், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பள்ளிபாளையம் வெப்படை செல்வராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜிஜேந்திரன், மாவட்ட வழக்கீல் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய துணைச் செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர் அணி சார்பு அணி நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் ஊர்வலமாக மேற்குரத வீதி வேலூர் ரோடு சி.எச்.பி. காலனி வரை சென்றனர்.


Next Story