தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
தென்காசி அருகே தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மேற்கு ஒன்றியம் வல்லம் பகுதியில் அவரது புகைப்படங்கள் பொறித்த கல்வெட்டுடன் கூடிய தி.மு.க. கொடியை மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் ஏற்றி வைத்து பேசினார்.
தொடர்ந்து 145 நபர்களுக்கு அரிசி பைகள், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 45 பேருக்கு தலா ரூ.500 ஊக்கத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஓணம் பீடி அதிபர் ஒய்.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவரும், தென்காசி பஞ்சாயத்து யூனியன் தலைவருமான வல்லம் ஷேக் அப்துல்லா, தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் தாவூது, ரஹீம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் கனிமொழி, செங்கோட்டை நகரச் செயலாளர் வக்கீல் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.