தி.மு.க. பிரமுகரை கம்பால் தாக்கிய பெண் கைது


தி.மு.க. பிரமுகரை கம்பால் தாக்கிய பெண் கைது
x

களக்காடு அருகே தி.மு.க. பிரமுகரை கம்பால் தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஜவஹர் வீதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 70). தி.மு.க. பிரமுகரான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் மனைவி மேகலா (62) என்பவருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில் சிதம்பரபுரத்தில் உள்ள ஒரு சுவரில் மேகலா, கருணாகரனையும், அவரது சகோதரர் அசோகன் மற்றும் குடும்பத்தினரை பற்றி அவதூறாக எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த கருணாகரன் அதனை அழிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மேகலா நான் எழுதி போட்டதை எப்படி அழிக்கலாம் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த மேகலா, கருணாகரனை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருணாகரன் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிந்து மேகலாவை கைது செய்தார்.


Related Tags :
Next Story