தி.மு.க. மகளிர் அணியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார்


தி.மு.க. மகளிர் அணியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார்
x

தி.மு.க. மகளிர் அணியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

திருச்சி

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் கவிதா தலைமையில் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த 20-ந் தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாகவும், அவதூறாகவும், அநாகரிகமான முறையில் பேசியும், பாட்டுப்பாடியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதேபோல் கனிமொழி எம்.பி.யை பெண் என்று கூட பாராமல் அவரை அவமானப்படுத்தும் விதமாக அவரை பற்றி பேசியும், பாடல் பாடி உள்ளனர். இதனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ரசித்து கைத்தட்டி சிரித்தனர். இந்த செயல் எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. அப்போது தி.மு.க. மகளிரணி துணை அமைப்பாளர்கள் துர்காதேவி, சுகுணாமுத்துராஜ், பூர்ணிமா மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story