தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பரிக்கல் கிராமத்தில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

திருநாவலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமத்தில் நடைபெற்றது. திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.வி.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண் ராஜ், திருநாவலூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், திலகராஜ், சேதுபதி, குமார், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி சுந்தரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் முருகானந்தம், குமாரசாமி, ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், துணை அமைப்பாளர் அம்மாசி, விவசாய அணி காம்பட்டு பழனிச்சாமி, டீ ஒரத்தூர் கவுன்சிலர் பிரபு, ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர்கள் செந்தில், அர்ஜுனன், தகவல் தொழில் நுட்ப அணி பெரும்பாக்கம் பார்த்திபன் மற்றும் பரிக்கல் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story