பொள்ளாச்சியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி பொள்ளாச்சியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி,
கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அகமது கபூர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜனதா நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் ஹமீது, செயற்குழு உறுப்பினர் சாகுல்அமீது, மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story






