திமுகவின் கபட நாடகம் இந்தி எதிர்ப்பு - அண்ணாமலை


திமுகவின் கபட நாடகம் இந்தி எதிர்ப்பு - அண்ணாமலை
x

திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை.மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை.என கூறினார்.

சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் குறித்து கூறியதாவது ;

இந்தி திணிப்பு என்பது பொய்; எதை வைத்து இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்துகிறார்கள்.திமுகவின் கபட நாடகம் தான் இந்தி எதிர்ப்பு .இந்தி திணிப்பு என்பதற்கான ஆதாரம் உள்ளதா? முதல் அமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும் .

திமுக மீது எதிர்ப்பு வந்தால் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவார் .அரசு பள்ளிகளில் தமிழ் கூட கட்டாய மொழியாக மாற்றப்படவில்லை.

திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை.மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை.புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கிறோம் என கூறினார்.


Next Story