கனிம வள கொள்ளையை தடுக்க தே.மு.தி.க.வினர் மனு


கனிம வள கொள்ளையை தடுக்க தே.மு.தி.க.வினர் மனு
x

கனிம வள கொள்ளையை தடுக்க தே.மு.தி.க.வினர் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியல் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ``புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுக்க நடவடிக்கை கோரி ஏற்கனவே 2 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கல் குவாரிகளும், மணல் குவாரிகளும் அனுமதியுடன் இயங்குகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும். அதில் எத்தனை அரசு அனுமதி பெற்று இயங்குகிறது, அதில் அரசு நிர்ணயித்த ஆழம், அகலம் எவ்வளவு என்ற தகவலை தெரிவிக்க வேண்டும். கனிம வள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். குளத்தூர் தாலுகா ராக்கத்தான்பட்டியில் உள்ள தனியார் குவாரியில் விபத்து ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறோம். தொடர்ந்து கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தனர். அப்போது நகர செயலாளர் பரமஜோதி, மாவட்ட அவை தலைவர் புஷ்பராஜ், நகர பொருளாளர் ரியாஸ் அகமது, நகர அவை தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story