த.மு.மு.க. ஆண்டு விழா


த.மு.மு.க. ஆண்டு விழா
x

நெல்லை மேலப்பாளையத்தில் த.மு.மு.க. ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக 29-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மேலபபாளையத்தில் மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மனித நேய மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில பொருளாளர் ரியாஸ், மாவட்ட துணை செயலாளர் காஜா, பகுதி தலைவர் யூசுப் சுல்தான், செயலாளர் பாதுஷா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் குதா, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அஜ்மல், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக்மதார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் வருகிற 31-ந்தேதி வரை நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்குதல், விளையாட்டு போட்டி நடத்துதல், ரத்ததான முகாம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

1 More update

Next Story