த.மு.மு.க. சார்பில் ரத்ததான முகாம்
ஆயக்குடியில் த.மு.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மருத்துவ சேவை அணி சார்பில், ஆயக்குடி பெரியபள்ளிவாசல் மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதற்கு மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளர் ரபீக் அகமது தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பழனி ரியாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சேக்அப்துல்லா, துணை செயலாளர் காதர்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரூக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பழனி அரசு மருத்துவமனை டாக்டர் முருகேஷ்குமார் தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் ரத்தத்தை சேகரித்தனர். முகாமில் த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆயக்குடி பேரூர் கழக நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் ஆயக்குடி பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் கலந்துகொண்டனர்.