த.மு.மு.க. சார்பில் பொது மருத்துவ முகாம்


த.மு.மு.க. சார்பில் பொது மருத்துவ முகாம்
x

பனப்பாக்கத்தில் த.மு.மு.க. சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலி,

பனப்பாக்கம் நெடும்புலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

த.மு.மு.க. நெமிலி ஒன்றிய தலைவர் பிலால் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரஹ்மான் ஷெரிப், ஒன்றிய பொருளாளர் தமீன் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக த.மு.மு.க. மாநில செயலாளர் ஏஜாஸ் அஹ்மத்சாயபு கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் கண், தோல், எலும்பு, குழந்தை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. மேலும் இருதய அறுவைசிகிச்சை, புற்றுநோய் கட்டிகள் நீக்கும் அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வி, நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவர் மாறன், ஒன்றிய கவுன்சிலர் ஆருண், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், பனப்பாக்கம் நகர தி.மு.க. செயலாளர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் கரிமுல்லா, ஒன்றிய ம.ம.க. துணை செயலாளர் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story