அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது


அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது என திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.

திருவாரூர்


அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது என திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.

விபத்துக்களை தவிர்க்க முடியும்

திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நிச்சயம் மின் விபத்துகளை தவிர்க்க முடியும். அதன்படி வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டிகளை சரியான முறையில் நில இணைப்பு செய்துள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டிகளின் அருகே குழந்தைகள் மற்றும் வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது.

மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல்

மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், புதைவடங்கள், இழுவைக்கம்பிகள் (ஸ்டே கம்பிகள்) ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. மேலும் சேதமடைந்த மின்கம்பங்களை தொடமால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும்.

ஈரக்கையினால் வீட்டிலுள்ள மின் சாதனங்களை இயக்க கூடாது. வீட்டில் அமைக்கப்பட்டுள்ள எர்த் கம்பிகளை தொட வேண்டாம். தொடர்புடைய பிரிவு அலுவலர் முன் அனுமதியின்றி மின்கம்பி மற்றும் மின்பாதைகளின் கீழ் உள்ள மரம் மற்றும் மரக்கிளைகளை வெட்டக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story