திருவாலங்காடு அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதலில் டாக்டர் படுகாயம்


திருவாலங்காடு அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதலில் டாக்டர் படுகாயம்
x

திருவாலங்காடு அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதலில் டாக்டர் படுகாயமடைந்தார்.

திருவள்ளூர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் தெய்வக்குமார் (வயது 35). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், திருவள்ளூர்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூடல்வாடி அருகே வந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று எந்தவித சிக்னலும் செய்யமால் திடீரென திரும்பி உள்ளார். இதனால் தெய்வகுமாரின் மோட்டார் சைக்கிள் ஆட்டோவின் மீது மோதி சாலையில் விழுந்ததில் கால் மற்றும் கை பகுதியில் காயமடைந்தார்.

இதையடுத்து, அவரை மீட்ட வாகன ஓட்டிகள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை மீனாட்சி சுந்தரம் அளித்த புகாரின்பேரில், திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story