கடன் தொல்லையால் டாக்டர் தற்கொலை


கடன் தொல்லையால் டாக்டர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2023 2:00 AM IST (Updated: 19 Jun 2023 11:51 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஓட்டல் அறையில் கடன் தொல்லை காரணமாக டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கோவையில் ஓட்டல் அறையில் கடன் தொல்லை காரணமாக டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டாக்டர்

கோவை சிங்காநல்லூர் பி.ஜி.பி. அபார்ட்மெண்டை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 33). டாக்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் அவர் வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் அதிகளவு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த கடன் தவணைத்தொகையை அவரால் முறையாக திருப்பி செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது.

இதனால் அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோகுல்நாத் வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றார்.

அவர் சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் மதியம் வரை ஆகியும் அவரின் அறை கதவு திறக்கப்படவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் போலீசாரை வரவழைத்து அறைக்கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அங்கு டாக்டர் கோகுல்நாத் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்தினர், கோகுல்நாத் கொடுத்த முகவரியை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் கோகுல்நாத் உடலை கைப்பற்றி கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டாக்டர் கோகுல்நாத் கடன் தொல்லை யால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story