அளவுக்கு அதிகமாக மது குடித்து மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்து மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்  சாவு
x

ஆரணி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்து மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஈ.பி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் வி.நக்கீரன் (வயது 55), டாக்டர்.

இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், மோகனப்பிரியா என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகளும் 15 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டனர்.

இதனால் தனிமையில் வசித்து வந்த நக்கீரன் நாளுக்கு நாள் மதுவிற்கு அடிமையாகி அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். மேலும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேவூர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்த நக்கீரன் நேற்று பகலில் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் அவரது தந்தை வெங்கடேசன் சென்று பார்த்தபோது மருத்துவமனை வளாகத்திலேயே அளவுக்கு அதிகமாக மது அருந்தி நக்கீரன் இறந்தது தெரிய வருகிறது.

இதுகுறித்து நக்கீரனின் தந்தை வெங்கடேசன் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story