டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.-

குமரி மாவட்ட அரசு மருத்துவர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குட்டக்குழி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த ஒரு டாக்டரை எந்த விளக்கமும், விசாரணையும் இன்றி திடீரென இடமாறுதல் செய்ததாக கூறியும், அந்த இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். திரளான டாக்டர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று டாக்டர்கள் கூறினர்.

1 More update

Next Story