கலெக்டரை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டரை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் கலெக்டரை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை பிரிவில் தலைமை மருத்துவராக கமலக்கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் பிரேத பரிசோதனைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலெக்டர் முருகேஷை சந்தித்துள்ளார்.

அப்போது கலெக்டர் முருகேஷ், கமலக்கண்ணனை ஒருமையில் மற்றும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது விரோத போக்கை கடைபிடிக்கும் மாவட்ட கலெக்டரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், டாக்டர் என்றும் பார்க்காமல் அநாகரீகமாக கலெக்டர் முருகேஷ் பேசி உள்ளார். இது தவறான உதாரணமாகும். இது நீடித்தால் அரசு மருத்துவமனையில் பணிபுரிவது கடினமாகி விடும்.

தவறு செய்திருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு தவறாக பேசுவது ஏற்புடையது அல்ல. இனி எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைகள் ஏற்படக்கூடாது.

கலெக்டர் இதுதொடர்பாக விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்றனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story