காரைக்குடியில் சிறுமி விழுங்கிய தங்க மோதிரத்தை அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுத்த டாக்டர்கள்
காரைக்குடியில் சிறுமி விழுங்கிய தங்க மோதிரத்தை டாக்டர்கள் அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுத்தனர்.
சிவகங்கை
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், தனது கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை விழுங்கிவிட்டாள். இதனால் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை அவளது பெற்றோர், காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமியின் வயிற்றில் மோதிரம் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சிறுமிக்கு லேசான மயக்க மருத்து கொடுத்து அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபிக் முறையில் மோதிரத்தை வெளியே எடுத்தனர். பின் அச்சிறுமியை முழுக்கண்காணிப்பில் வைத்து பரிசோதித்து பூரண நலத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சிறுமிக்கு அந்த மருத்துவமனை டாக்டர்கள் சதீஷ், கலாராணி மற்றும் மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story