தங்களது குடும்பத்தினரை போல் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்


தங்களது குடும்பத்தினரை போல் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:15:09+05:30)

தங்களது குடும்பத்தினரை போல் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தினார்.

நாகப்பட்டினம்

தங்களது குடும்பத்தினரை போல் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தினார்.

கருத்தரங்கம்

நாகை அருகே வேளாங்கண்ணியில் தமிழக அரசின் குடும்பநலத் துறை சார்பில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்களுக்கான தர நிர்ணயக்குழு கருத்தரங்கம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். குடும்பநலத்துறை துணை இயக்குனர் ஜோஸ்பின்அமுதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசும்போது கூறியதாவது:-

குடும்பத்தினரை போல்...

மருத்துவத்துறையில் சிறந்த மாவட்டங்களாக டெல்டா மாவட்டங்கள் இருக்கவேண்டும். அனைத்து டாக்டர்களும் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களை போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தங்கள் பணியை ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். ஒரு அரசு பணியாளராக நாம் சமூகத்தின் மீதுள்ள அக்கரை, பொறுப்பினை உணர்ந்து பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் நலனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நாகை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் சாந்தி, குப்புசாமி உள்பட நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர், டாக்டர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story