கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவை
அரசாணை 293-யை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டு உள்ளவற்றை அரசு டாக்டர் களுக்கு உடனடியாக வழங்க கோரியும் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு ஆஸ்பத் திரி வளாகத்தில் ஏராளமான டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். இது குறித்து டாக்டர்கள் கூறும் போது, கொரோனா பெருந்தொற்று மற்றும் பல்வேறு இயற்கை பேரிடர்களில் பணியாற்றிய தங்களை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்றதும் அரசாணை-293-ஐ வெளியிட்டார். ஆனால் தற்போது வரை இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வில்லை. மேலும் சிறப்பு டாக்டர்கள் மற்றும் பொது டாக்டர்கள் இடையிலான ஊதிய முரண்பாடுகளை காரணம் காட்டி காலமுறை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே எங்களது கோரிக்கைளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.