டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்


டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

நிலுவைத்தொகையோடு உரிய பணப்பலன்களை வழங்கக்கோரி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

நிலுவைத்தொகையோடு உரிய பணப்பலன்களை வழங்கக்கோரி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு டாக்டர்கள்

தமிழகத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் சார்பில் ஊதிய உயர்வு கேட்டு, கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின், ஐகோர்ட்டு உத்தரவின்படி, தமிழக அரசின் நிதித்துறையால் 2020-ல் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரையின் பெயரில், அரசாணை வெளியிடப்பட்டது.இந்நிலையில், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஒரே மாதத்தில் டாக்டர்களுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு பயன் தரும் வகையில் அரசாணை 293- ஐ அறிவித்தார். 2021-ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி, வெளியான அரசாணை 2 ஆண்டு ஆகியும் இதுவரை அரசு செயல்படுத்தவில்லை. இதற்கிடையில், ஒரு சில டாக்டர்கள் எதிர்ப்பினால், அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம்

இது தொடர்பாக நடந்த வழக்கில் ஐகோர்ட்டு, அரசாணையின் படி நிலுவை தொகையோடு உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. மேலும், டாக்டர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்களுக்கு தடை இல்லை எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக அரசும் அரசாணை 293 யை நிறுத்தி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறுதியளித்தது.நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தஞ்சை தலைவர் டாக்டர் அன்பழகன் தலைமையில் செயலாளர் வினோத் முன்னிலையில் டாக்டர்கள் மணவழகன், தென்றல், வெண்ணிலா, அறிவானந்தம், சந்தானபிரபு, பாலசுப்பிரமணியன், கார்த்திக், அசோக்குமார், தமிழ்மணி மற்றும் டாக்டர்கள்நேற்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதனிடம், நீதிமன்ற உத்தரவு நகலை வழங்கினர்.தொடர்ந்து அவரது அறையில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பல்வேறு துறை பேராசிரியர்கள், டாக்டர்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story