அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் இருப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் தகவல்


அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் இருப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் தகவல்
x

அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் இருப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்

ஆய்வு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி ேபசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றில் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3 மாத இருப்புகள்

இதேபோல் ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும் 48 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் கவனிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வு செய்து பிறவி காது கேளாமை போன்ற நோய்கள் கண்டறிய வேண்டும். மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அனைத்து மருத்துவமனைகளிலும் குறைந்தது 3 மாத இருப்புகள் இருப்பதை அந்தந்த மருத்துவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சல் மற்றும் டெங்கு பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, வரும் காலங்களில் காய்ச்சல் மற்றும் டெங்குவினால் தீவிர நோய் பரவல் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்.

குடும்ப நல அறுவை சிகிச்சை

கரூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். தொற்றா நோய்கள் கண்டறிவது மற்றும் மக்களை தேடி மருத்துவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இதில் கண்டறியும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட நலமுடன் வாழக்கூடிய குழந்தைகளை கொண்ட தாய் மற்றும் தந்தைகளுக்கு ஒரு சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடத்தி அதில் குடும்ப நல அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்த சோகையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை சரி செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 17 ஆயிரம் மாணவிகளுக்கு வரப்பெற்ற முடிவை வகைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தட்டம்மை ருபெல்லா இல்லா தமிழ்நாட்டை 2023-ல் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story