கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த டாக்டர்கள்


கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த டாக்டர்கள்
x

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து டாக்டர்கள் பணிபுரிந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழக அரசு ஆணை எண்.354-ஐ உடனடியாக மறுஆய்வு செய்திட வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். டாக்டர்களுக்கான சேமநலநிதியை (டி.சி.எப்.) விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலநேரம் மாற்றி அமைத்துள்ள அரசாணை எண்.225-ஐ ரத்து செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தோம் என்றனர்.


Next Story