வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம்
வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ஆவணங்கள், ஏடுகள்
வரலாற்று சிறப்பு மிக்க சரித்திர செய்திகள், ஏடுகள், ஆவணங்கள் ஆகியவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாதிரியான தொன்மையான ஆவணங்கள் நமது கலாசாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கும். இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ், ஆவண காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் துறையின் பாதுகாப்பில் வைக்க வேண்டியது அவசியமாகின்றது.
மேலும், காலமாற்றத்தினாலும், மனிதனின் அஜாக்கிரதையாலும் இதன் முக்கியத்துவம் கெடாமல், குறையாமல் மின்னணு முறையில் பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.
தெரிந்துகொள்ளலாம்
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களில் வரலாற்று சிறப்பு மிகுந்த ஆவணங்கள் ஏதேனும் தங்கள் வசம் இருந்தால், சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்து மேற்கண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை பாதுகாக்கவும், ஆராய்ச்சிக்கு பயன்படுத்த உதவிட வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொது) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.