ஓமலூர் அருகேசிறுத்தை புலி நடமாட்டமா? கால் தடங்களை வனத்துறையினர் ஆய்வுகாயங்களுடன் நாய் இறந்து கிடந்ததால் பரபரப்பு


ஓமலூர் அருகேசிறுத்தை புலி நடமாட்டமா? கால் தடங்களை வனத்துறையினர் ஆய்வுகாயங்களுடன் நாய் இறந்து கிடந்ததால் பரபரப்பு
x

ஓமலூர் அருகே காயங்களுடன் நாய் இறந்து கிடந்தது. இதனால் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தில் கால்தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலம்

ஓமலூர்

ஓமலூர் அருகே காயங்களுடன் நாய் இறந்து கிடந்தது. இதனால் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தில் கால்தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

காயங்களுடன் நாய் சாவு

ஓமலூர் அருகே சக்கரைசெட்டிபட்டி பன்னிகரடு வடக்கு காப்புகாடு வனப்பகுதியை ஒட்டி கோவிந்தன் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் பாதுகாப்புக்காக நாய் ஒன்றை சங்கிலியால் கட்டி வைத்து இருந்தனர். நேற்று காலை அந்த நாய் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. நாயை மர்மவிலங்கு ஒன்று கடித்து குதறியது தெரிய வந்தது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு கோவிந்தன் தகவல் தெரிவித்தார். வனவர் பழனிவேல் மற்றும் வனத்துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வெள்ளாளப்பட்டி கால்நடை டாக்டர் கவிதா சம்பவ இடத்திற்கு சென்று நாயின் உடலை பரிசோதனை செய்தனர்.

சிறுத்தை புலி நடமாட்டம்?

ஏற்கனவே டேனிஷ்பேட்டை வனச்சரக பகுதியான மூக்கனூர், பூசாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இங்கு நாய் இறந்து கிடந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சிறுத்தை புலி இடம் பெயர்ந்து வந்து இருக்கலாம் என அந்த பகுதி மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டது.

வனத்துறையினர் அங்கு விவசாய நிலங்களில் பதிவாகி இருந்த மர்மவிலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னே சிறுத்தை புலி நடமாட்டம் இருந்ததாக பொதுமக்கள் கூறினர். எனவே அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்தும் சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story