அவினாசி அருகே நாய்க்கு மது கொடுத்து ஆட்டம் போட வைத்த போதை ஆசாமி
அவினாசி அருகே நாய்க்கு மது கொடுத்து ஆட்டம் போட வைத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டது
அவினாசி அருகே நாய்க்கு மது கொடுத்து ஆட்டம் போட வைத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டது
நாய்க்கு மது
மதியை மழுங்க செய்வது மதுபானம். நிதி இழந்து, நிலை குலைந்து, தனை மறந்து, வினை விதைத்து, விபரீதத்தை விளைச்சலாக தருவது மது தரும் போதை. போதை வந்தால் பாதை தெரிவது இல்லை. அது மனிதனாக இருந்தால் என்ன? மிருகமாக இருந்தால் என்ன? மது உள்ளே சென்றவுடன் அறத்தை மறக்க செய்து, தரத்தை குறைத்து, ஆடாத ஆட்டத்தையெல்லாம் ஆட்டுவிக்கிறது.
மனிதருக்குள் இப்படியும் ஒரு ஆசையா? வாலை ஆட்டும் நாயை மதுபானம் குடிக்க வைத்து அதை தள்ளாட வைத்து அட்டகாசம் செய்துள்ளனர் போதை ஆசாமிகள்.
இது பற்றிய விபரம் வருமாறு:-
தள்ளாடியது
அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் அடுத்தடுத்து பிரபல திருமண மண்டபங்கள் உள்ளன. ஒரு மண்டபத்தின் அருகில் செடி, கொடிகள் நிறைந்த பகுதியில் மர்ம ஆசாமி ஒருவர் தனக்கு மதுபோதை அதிகமான நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரியும் ஒரு நாய்க்கு பிளாஸ்டிக் டம்ளர் நிறைய மதுபானத்தை ஊற்றி கொடுத்து அதை குடிக்க வைத்துள்ளார். அந்த நாய் மது முழுவதையும் குடித்துவிட்டு சிறிது நேரத்தில் நடக்க முயன்றது. ஆனால் அதற்கு மதுபோதை தலைக்கு ஏறிய நிலையில் நடக்க முடியாமல் தள்ளாடி, தள்ளாடி சென்று தரையில் அப்படியே மயங்கி கிடந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.