உணவுகூட உண்ணாமல் எஜமானருக்காக காத்திருக்கும் நாய்


உணவுகூட உண்ணாமல் எஜமானருக்காக காத்திருக்கும் நாய்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உணவுகூட உண்ணாமல் எஜமானருக்காக நாய் காத்திருக்கிறது.

சிவகங்கை

தேவகோட்டை,

விலங்குகளில் நன்றி உணர்வு அதிகம் உள்ளது நாய் என்பார்கள். மேலும் எவர் தனக்கு சிறிய உணவு அளித்தாலும் அவர்கள் மீது அன்பை பொழிவதில் நாய்க்கு ஈடு இணை இல்லை. தேவகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடை வாசலில் கடந்த சில நாட்களாக நாய் ஒன்று படுத்து கிடக்கிறது. தனது எஜமானரை பின் தொடர்ந்து வந்துள்ள அந்த நாய் அவர் பஸ் ஏறி சென்றதும் மீண்டும் வீடு ெசல்ல வழி தெரியாமல் தவித்து அங்கேயே எஜமானருக்காக காத்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் படுத்து கிடக்கும் அந்த நாய் எதுவும் சாப்பிடாமல் பட்டினியாகவே இருக்கிறது. அக்கம்பக்கத்தினரும், அவ்வழியாக செல்பவர்களும் உணவு அளித்தாலும் அந்த நாய் சாப்பிடுவதில்லை. அது வீட்டில் வளர்ந்த நாய் என்பதால் வேறு எதையும் உண்ண மறுக்கிறது. பல நாட்களாக தனது எஜமனாருக்காக உணவு உண்ணாமல் அங்கேயே காத்து கிடக்கும் நாயை விலங்குகள் ஆர்வலர்கள் பரிதாபத்துடன் பார்த்து செல்கின்றனர்.

1 More update

Related Tags :
Next Story