சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்


சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்
x

சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

திருவாடானை,

திருவாடானை தாலுகாவில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை ஏதும் இல்லாததால் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களை விரட்டிச் சென்று கடித்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவாடானை, தொண்டி, வெள்ளையபுரம், மங்களக்குடி, எஸ்.பி. பட்டினம், பாண்டுகுடி, சி.கே.மங்கலம், நம்புதாளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆண்டுகளாக இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தெருக்களில் சுற்றி திரிகின்ற நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை நிலவி வருகிறது. தெருநாய்களின் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை விடுவிக்க நாய்கள் மற்றும் வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story