நாய் கடித்து புள்ளி மான் சாவு
நாய் கடித்து புள்ளி மான் இறந்தது.
சிவகங்கை
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சங்கிலியான் கோவில் பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த 4 வயது மதிக்கத்தக்க புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியதில் புள்ளி மான் இறந்தது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு வந்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் திருப்பத்தூர் வனத்துறை அலுவலர் திருப்பதி ராஜனுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் வனத்துறை அலுவலர் திருப்பதி ராஜன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த புள்ளிமானை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு இறந்த புள்ளிமானின் உடலை புதைத்தனர்.
Related Tags :
Next Story