தமுக்கம் மைதானத்தில் நாய் கண்காட்சி- ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்


தமுக்கம் மைதானத்தில் நாய் கண்காட்சி- ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்
x

தமுக்கம் மைதானத்தில் நாய் கண்காட்சியை ஆர்வத்துடன் மக்கள் பார்வையிட்டனர்.

மதுரை


மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள உள்அரங்கத்தில் நேற்று நாய் கண்காட்சி நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்த இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட 55 வகையான நாய்கள் கலந்து கொண்டன. இந்த நாய்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள், அணிவகுப்பு நடத்தப்பட்டது. குறிப்பாக, நாட்டு இன நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை போன்றவைகளும், வெளிநாட்டு இன நாய்களும் அதிக அளவில் பங்கேற்று மக்களை கவர்ந்தன. இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக, பல இடங்களில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். போட்டியின் முடிவில், சிறந்த நாட்டு நாய், சிறந்த நாட்டு நாய் குட்டி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசு கோப்பையும், தங்க காசும் வழங்கப்பட்டது. இதுபோல், 12 முதல் 18 வயதிற்கான சிறந்த ஜூனியர் ஹாண்லர்க்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இதற்காக, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து சர்வதேச நடுவர்கள் கலந்து கொண்டு, சிறந்த 8 நாய்களை தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மதுரை கெனைன் கிளப் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாய் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையிலும், நாய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த கண்காட்சி நடைபெற்றது என்றனர்.


Next Story