வெறி நாய் கடித்து 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் படுகாயம்
திருவோணம் அருகே வெறி நாய் கடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்
ஒரத்தநாடு;
திருவோணம் அருகே வெறி நாய் கடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்
வெறி நாய் கடித்ததில் 3 பேர் படுகாயம்
தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்வேலி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் புவனேஸ்வரன்(வயது 14), மருதுபாண்டியன் மகன் மருதேஷ்(12), ராமன் மகன் பாலமுருகன்(29) ஆகிய 3 பேரை நேற்று காலை வெறி நாய் கடித்தது.ஒரே நாய் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்திற்குள் 2 பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை கடித்து குதறிய சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் ஒன்று திரண்டு சம்பந்தப்பட்ட வெறிநாயை விரட்டி பிடித்து கட்டி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
மறுமுனையில் வெறி நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த புவனேஸ்வரன், மருதேஷ், பாலமுருகன் ஆகிய 3 பேரையும் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டுறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிறுவன் மருதேஷ்சை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு மருதேஷ் சிகிச்சை பெற்று வருகிறான்.கிராமங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெய்வேலி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.