நாய்கள் கடித்து ஆடுகள் சாவு


நாய்கள் கடித்து ஆடுகள் சாவு
x

மயிலாடுதுறை அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்தன. இதனால் ஊராட்சி அலுவலகம் முன்பு மக்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்தன. இதனால் ஊராட்சி அலுவலகம் முன்பு மக்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆடுகள் சாவு

மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சியில் கடந்த 1 ஆண்டாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டுமே 50- க்கும் மேற்பட்ட ஆடுகளையும் கடித்து கொன்றதாகவும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகளையும் கடித்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்றுமுன்தினம் நீடூர் தாமரை வீதியை சேர்ந்த லோகநாயகி வளர்த்து வந்த 2 ஆடுகளை நாய்கள் கடித்தன. இதனால் 2 ஆடுகளும் உயிரிழந்தன.மேலும் நேற்று அதே பகுதியை சேர்ந்த பிரியா, சரோஜா ஆகியோரின் வீட்டில் வளர்த்து வந்த 3 ஆடுகளை கால் மற்றும் கழுத்தில் நாய்கள் கடித்து கொன்றது.

கோஷம் எழுப்பினர்

இதனால் உயிரிழந்த ஆடுகளையும் நீடூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வைத்து அப்பகுதி மக்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி கோஷம் எழுப்பினர்.இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கால்நடை மருத்துவரை அழைத்து ஆடுகள் எவ்வாறு உயிர் இழந்தது என்று பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசார் ெதருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில் பொதுமக்்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து பொதுக்கள் கூறுகையில், தெருநாய்களை பிடித்து வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லாதபட்சத்தில் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடதப்படும் என கூறினர்.


Next Story