சுவர் துவாரத்தில் சிக்கிய நாயின் தலை: இரவு முழுவதும் உயிருக்கு போராடிய சோகம்...!
சுவரின் துவாரத்தில் சிக்கிக் கொண்ட நாயின் தலை. இரவு முழுவதும் உயிருக்கு போராடிய நாயை தீணைப்பு வீரர்கள் மீட்டு உள்ளனர்.
குமரி,
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் லெட்சுமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் பிரதாப். இவர் வீட்டின் மதில் சுவர் துவாரத்தில் தலையை நுழைத்த நாய் சிக்கி கொண்டு உள்ளது. சுவரின் துவாரத்தில் வசமாக சிக்சிய தலையை நாயால் வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் நாய் உயிருக்கு போராடிக் கொண்டருந்தது.
வீட்டின் உரிமையாளர் பிரதாப் இன்று காலை வெளியே வந்த போது சுவரின் துவாரத்தில் நாய் சிக்கிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஆறுமுகப் பெருமாள், வீரலெட்சுமணன், விவேகானந்தன், அம்சத்கண்ணன், பர்த்தீபன் ஆகிய வீரர்களின் சுவரின் துவாரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக மீட்டனர்.