விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்கள்


விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்கள்
x

ஆரணியில் விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டன

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரிக்கரை அருகில் ஆரணி- தேவிகாபுரம் நெடுஞ்சாலை பகுதியில் அதிகளவில் நாய் தொல்லை இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள்கோழி இறைச்சியில் விஷம் கலந்து நாய்களுக்கு போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கேயே சுருண்டு இறந்தன.

இன்று காலை அப்பகுதியில் உள்ள நிலத்தின் உரிமையாளரான ஜெயவேலுவின் மகன்கள் நாய்கள் அதிக அளவில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது நிலத்திலேயே பள்ளம் தோண்டி நாய்களை புதைத்துள்ளனர்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நாய்களுக்கு விஷம் கலந்த உணவை வழங்கிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ரெட்கிராஸ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story