தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அவதி


தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அவதி
x

வந்தவாசியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பஜார் சாலை, அச்சரப்பாக்கம் சாலை, சன்னதி தெரு, காந்தி சாலை, தெற்கு போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக 30-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன.

இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் நடந்து செல்லும்போது அவதிபடுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பணிகள் முடிந்து வீட்டுக்கு திரும்பும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் நாய்களை பார்த்து அச்சம் அடைகின்றனர்.

மேலும் பள்ளி நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது கூட்டம் கூட்டமாக நாய்கள் வரும்போது மாணவ-மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூட்டம் கூட்டமாக சுற்றி தெரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், நாய்களின் இனப்பெருக்கம் செய்யாத அளவிற்கு கருத்தடை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story