தொற்றுநோயால் அவதிப்படும் நாய்கள்


தொற்றுநோயால் அவதிப்படும் நாய்கள்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் பகுதியில் தொற்றுநோயால் அவதிப்படும் நாய்களுக்கு கால்நடை துறையினர் சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதியில் தொற்றுநோயால் அவதிப்படும் நாய்களுக்கு கால்நடை துறையினர் சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாய்களுக்கு தொற்றுநோய்

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்களை சிலர் வளர்த்து வருகின்றனர். அதேபோல் ஆதரவற்ற தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நாய்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றன. தொற்று நோயால் நாய்களில் உடலில் செதில், செதில்களாக ஏற்பட்டு கருப்பு நிறமாக மாறி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் உடல் இழைத்து எலும்பும், தோலுமாக காணப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் அருகே வரும் மற்ற நாய்களுக்கும் நோய் பரவி வருகிறது.

பொதுமக்கள் அச்சம்

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் நடக்க முடியாமலும், ஓட முடியாமலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் படுத்து கிடக்கிறது. நாய்களுக்கு தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகளவில் வேகமாக பரவி வருகிறது. இதனால், நாய்கள் அவதி அடைவதுடன், சில நாய்கள் இறந்து விடுகின்றன.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் தொற்று நோய் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த நோய் மக்களுக்கும் பரவுமோ என அனைவரிடமும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்க வேண்டும்

மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் முன்பு நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் படுத்துகிடக்கின்றன. அப்போது அங்கு செல்லும் மக்கள், இந்த நாய்களை பார்த்து முகம் சுழிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட கால்நடை துறை அதிகாரிகள், நோய் தொற்று ஏற்பட்ட நாய்களை கண்டறிந்து அவைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story