குருநாதர் கோவிலில் அன்னதானம்
குருநாதர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்சி
மணப்பாறை, செப்.18-
மணப்பாறை அரசுநிலைபாளையத்தில் உள்ள குருநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் 11-வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பருவமழை தொடர்ந்து பெய்யவும், மக்கள் நிம்மதியாக வாழ வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவிற்கு அணியாப்பூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற ஆலோசகர் தங்கவேல் நாடார் தலைமை தாங்கினார். மணப்பாறை ஆசிரியர் ஜெகநாதன், நற்பணி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அன்னதான நிகழ்ச்சியை மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால் தொடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், காமராஜ், குருநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story