எம்.எஸ்.டோனி பிறந்த நாள் விழாவையொட்டி அன்னதானம்
எம்.எஸ்.டோனி பிறந்த நாள் விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை
எம்.எஸ்.டோனி பிறந்த நாள் விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனியின் 42-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எம்.எஸ்.டோனி இளைஞர் சங்கம் மற்றும் ஏ.பி.ஜே. அறக்கட்டளை சார்பாக ஆற்காடு பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆற்காட்டை சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி.சாரதி, ரோட்டரி பரத்குமார், தொழிலதிபர் ஆகாஷ் மற்றும் அறக்கட்டளை நிறுவன தலைவர் கோபி உள்பட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story